ராமர் தாடகை வதம் முடிந்து திரும்பும் வழியில் அவர்கள் தங்கிய இடம்தான் (நாணல் வனம்) ஊ.அகரம். அதன் நினைவாக இந்த ஊரில் 800 ஆண்டுகளுக்கு முன், கோதண்டராமர் சிலைகள் நிறுவப்பட்டன.
திறக்கும் நேரம்:
காலை 10 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கோதண்டராமர் கோயில்
ஊ.அகரம், 607804, விருத்தாசலம், தாலுக்கா,
கடலுார் மாவட்டம்.
போன்:
+91 9444496333, 9994579898
பொது தகவல்:
கிழக்கு நோக்கிய கருவறையில் சீதை, கோதண்டராமர், லட்சுமணர், அனுமன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கருவறையின் மேல் ராஜகோபுரம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
இந்த பெருமாளை வணங்கினால், நிலையான செல்வம், திருமணத் தடை நீங்க புணர்பூச நட்சத்திர நாளில் ஜதகத்தை வைத்து வழிபாடு செய்தல், மக்கட்பேறு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெற்று வையகத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன்:
தங்கள் பிராத்தனை நிறைவேறப்பெற்ற பக்தர்கள் பெருமாளுக்கு துளசி மாலை சாத்துகிறார்கள். நெய் தீபம் ஏற்றுகிறார்கள். இதை தவிர சுவாமிக்கு திருமஞ்சனம், உலர்ந்த துாய வெள்ளாடை சாத்துதல், அபிேஷக ஆராதனை செய்கின்றனர். பிரசாதம் செய்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்துவிட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
தல வரலாறு:
வனப்பகுதி வசிக்கும் முனிவர்களையும், மக்களையும், செயற்கை சூறாவளியை உண்டாக்கியும், கல்மழை பெய்ய செய்தும் தாடகை என்னும் ராட்சஷி துன்புறுத்தி வந்தாள். தகவலறிந்த ராமன் இடையூறு செய்து வந்த தாடகையின் மார்பைப் பிளந்தார். தொடர்ந்து, மாரீசன், சுபாகுவையும் வீழ்த்தினார்.
பல்லவ மன்னன் ஆண்டு வந்த காலத்தில், ஸ்ரீமுஷ்ணம் கோவில் பட்டாச்சாரியர்கள் வைத்திருந்த ஓலைச்சுவடியில், ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து ஏகயோசனை துாரத்தில் (20கி.மீ) ஸ்ரீசக்கர தீர்த்தக்குளத்துடன் ஸ்ரீராமர் தங்கியதாக தகவல் இருந்தது. ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து பட்டாச்சாரியார்கள் குழு வடக்கு நோக்கி 20 கி.மீ., துாரம் சென்ற போது, நாணல் புதர்கள் மண்டிய வனத்தில், குளத்தை கண்டனர். தாகம் தீர்க்க தண்ணீரை குடித்த போது, சக்கரை போல் இனித்தது. குளத்தின் அருகே புதைந்த நிலையில் இருந்த ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சிலைகள் கண்டு பிடித்து, அவ்விடத்தில் கோவில் கட்டப்பட்டது.
அதிசயத்தின் அடிப்படையில்:ராமர் தாடகை வதம் முடிந்து திரும்பும் வழியில் அவர்கள் தங்கிய இடம்தான் (நாணல் வனம்) ஊ.அகரம். அதன் நினைவாக இந்த ஊரில் 800 ஆண்டுகளுக்கு முன், கோதண்டராமர் சிலைகள் நிறுவப்பட்டன.
இருப்பிடம் : விருத்தாசலம்- கடலுõர் தேசிய நெடுஞ்சாலையில் விருத்தாசலத்திலிருந்து 8 கி.மீ. துõரத்தில் ஊ. அகரம் உள்ளது. விருத்தாசலத்திலிருந்து முதனை செல்லும் அனைத்து பேருந்துகளிலும் செல்லலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
விருத்தாசலம், மந்தாரக்குப்பம்