அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
கைலாசநாதர் |
|
அம்மன்/தாயார் | : |
காமாட்சியம்மன் |
|
தல விருட்சம் | : |
வில்வம் |
|
தீர்த்தம் | : |
கொள்ளிடம் |
|
ஆகமம்/பூஜை | : |
காமிகம் |
|
ஊர் | : |
திருமானூர் |
|
மாவட்டம் | : |
அரியலூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
சித்திரை வருடபிறப்பு. மாதாந்திர பிரதோஷம். வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடிபூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விஜயதசமி, தீபாவளி, அன்னாபிஷேகம், திருகார்த்திகை தீபம், திருவாதிரை, சங்கராந்தி. தைபூசம், மாசிமகம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் வெகு விமர்சையாக நடத்தப்படுகின்றன. |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
இத்திருக்கோயிலில் சுவாமியையும் அம்பாளையும் ஒரே இடத்தில் இருந்து தரிசனம் செய்ய கூடிய சிறப்புடையது. தென்முக கடவுளாம் தெட்சிணாமூர்த்தி சின்முத்திரை ஜெபமாலை, இடது கையில் ஓலைச்சுவடி, உடுக்கை, அக்னி பிறப்பு ஆகியவை தன் கைகளில் ஏந்தி காலடியில் முயலகன் மீது கால் பதித்துள்ளார். முயலகன் கையில் கத்தியும், கேடயமும் இல்லாமல் பாம்பு உள்ளது. எனவே இங்குள்ள தெட்சிணாமூர்த்தி நாக தோஷ மூர்த்தியாக விளங்குகிறார்.
இத்திருக்கோயிலின் வட மேற்கு மூலையில் ஜேஷ்டா தேவி, வராஹி மற்றும் சாயா தேவியுடன் காட்சியளிக்கிறார். லெட்சுமி தேவியை வழிபடுவதால் வரும் செல்வத்தை நிலை நிறுத்த ஜேஷ்டா தேவியை வணங்க வேண்டும். சுமார் 750 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிவ ஆலயங்களில் தான் ஜேஷ்டாதேவி வழிபாடுயிருந்திருக்கிறது. அவ்வகையில் இந்த ஆலயம் மிகவும் பழமையானது என தெரிய வருகிறது. இவரை வழிபட்டால் செல்வம் தங்கும். மனசோர்வு நீங்கி மன நிம்மதி கிடைக்கும் என்பது இத்தலத்தின் சிறப்பு. |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 6.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 4.00 முதல் இரவு 8.00 மணி வரை | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதசுவாமி திருக்கோயில். திருமானூர், 621 715. அரியலூர் |
|
| | |
|
போன்: | | | | | |
+91 97915 16694 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
இத்திருக்கோயிலின் கிழக்குவாசல் வழியாக வந்தால் பலிபீடமும், நந்திகேஸ்வரர்
தரிசனம் செய்து விநாயகர், மூலவர் கைலாசநாதசுவாமி கிழக்கு முகமாகவும்,
காமகோட்ட செல்வியாம் காமாட்சியம்மன் தெற்கு முகமாகவும் அமையப்பெற்ற
அம்மையப்பனை ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். சுமார் 2.5 ஏக்கர்
பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் இரண்டு பிரகாரமும் இரண்டு
வாசலும் உள்ளன. |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. | |
|
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
இத்திருக்கோயிலில் உள்ள செற்புத் திருமேனிகள் பிற்கால சோழர்களின் கலையம்சத்தின் படி உள்ளன. மேலும் 1791 ஆம் ஆண்டு அரியலூர் ஜமீன்தார் ஒப்பிலாத மழவரையார் என்பவர் பல திருப்பணிகளை செய்துள்ளார். |
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
900 வருடங்கள் பழமையான இத்தலம் சோழ மாமன்னர் கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவியாரால் கட்ட்ப்பெற்றது. பிற்காலத்தில் பாண்டிய மன்னரார்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. வான் பொய்பினும் தான் பொய்யாகச் சோழ வளநாட்டின் கண் வற்றாத ஜீவ நதியான கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்த திறைமூற்த்தியான தியாகவிநோதனாற்றூர் என்பது திருமாநல்லூர் என்றாகி பின் மருவி திருமானூர் என்றானது. இவ்வூரின் நடுநாயகமாக இந்த ஊர் அமைந்திருக்கிறது.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|