Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மள்ளியூர் மகா கணபதி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மள்ளியூர் மகா கணபதி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: விநாயகர்
  ஊர்: மள்ளியூர்
  மாவட்டம்: கோட்டயம்
  மாநிலம்: கேரளா
 
 திருவிழா:
     
  விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி  
     
 தல சிறப்பு:
     
  கர்ப்பக்கிரகத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில், காக்கும்கடவுளான கிருஷ்ணன் அமர்ந்திருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  மள்ளியூர் மகா கணபதி கோயில் கோட்டயம் - 686001, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.  
   
போன்:
   
  +91- 4829 - 243 455, 243 319 , 94471 14345. 
    
 பொது தகவல்:
     
 

கோயில் சுற்றுப்பகுதியில் சாஸ்தா, மகாவிஷ்ணு, துர்க்கை, அந்தி மகா காவலன், யக்ஷி, நாகர் சன்னதிகள் உள்ளன. கேரள மாநிலம் அருகே வேறெங்கும் இல்லாத விசேஷம் இக்கோயிலில் உள்ளது. இங்கு விநாயகரும் கண்ணனும் ஒன்றாக அருள்பாலிப்பதால் அனைத்து தரப்பட்ட பக்தர்களும் இங்கு பெரும் திரளாக வந்து தரிசனம் செய்கிறார்கள்.

 
     
 
பிரார்த்தனை
    
 

தோஷத்திலிருந்து விடுபடவும், நோயிலிருந்து விடுபடவும் மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

 
    
நேர்த்திக்கடன்:
    
  திருமணத்தடை நீங்குவதற்காக செவ்வாய், வெள்ளி கிழமைகளில் செய்யப்படும் "பழமாலை' மிகவும் சக்தி வாய்ந்தது. குழந்தை பாக்கியத்திற்காக பால்பாயாசம் படைக்கப்படுகிறது. பித்ரு கடன் செய்பவர்கள் இங்கு "சதுர்த்தியூட்டு' எனப்படும் வழிபாடு செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

சங்கீத ஆராதனை: இசை நாயகன் கிருஷ்ணனை மகிழ்விக்கும் நிகழ்ச்சி இங்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் மகர விளக்கு காலங்களில் கோயில் முற்றத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில், இந்தியாவின் பிரபல பாடகர்கள் பாடி, இசையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கிறார்கள்.

புதிய பாடகர்களும், இசை கற்பவர்களும் இங்கு வந்து இந்த அரங்கத்தில் தங்களது இசை நிகழ்ச்சியை நடத்தி இறைவனின் அருளைப்பெறுகிறார்கள். இப்படி இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

"முக்குற்றி புஷ்பாஞ்சலி': முக்குற்றி எனப்படும் செடிகளை வேரோடு (108) பறித்து, தனியாக தயாரிக்கப்பட்ட திரவியத்தில் மூழ்கவைத்து விடுவார்கள். பின் அதை எடுத்து விநாயகர் மந்திரம் ஓதி வழிபாடுசெய்யப்படுகிறது. இப்படி செய்வதனால்எப்படிப்பட்ட தோஷத்திலிருந்தும் விடுபடலாம் என கூறப்படுகிறது. ஒரு நாளில் ஐந்து முறை மட்டும் இந்த வழிபாடு செய்யப்படுவதால் முன்பதிவு செய்ய வேண்டும்.

பக்தர்கள் நோயிலிருந்து விடுபட "தடி நைவேத்தியம்' செய்யப்படுகிறது.

 
     
  தல வரலாறு:
     
 

பல நூற்றாண்டுகளுக்கு முன்,

தற்போது கோயிலை நிர்வகித்து வரும்

சங்கரன் நம்பூதிரியின் முன்னோர் ஒருவர் கணபதி விக்ரகம் ஒன்றை கொண்டு வந்து இத்தலத்தில் வைத்து பூஜை செய்துள்ளார்.பின்னர் ஆர்யபள்ளி மனை, வடக்கேடம் மனை ஆகிய இரு குடும்பங்களும் சேர்ந்து கணபதியை சுற்றி கட்டிடம் கட்டி, பராமரித்து வந்தார்கள்.

ஒரு முறை இவ்விரு குடும்பங்களும் மிகவும் கஷ்டநிலைக்கு வந்தது. இதனால் கோயில் பராமரிப்பும் பாதிப்புக்கு உள்ளாகியது. மேற்கூரை இல்லாத நிலையில் அவர்கள் கணபதியை பக்தியோடு வழிபாடு செய்து வந்தனர்.

இவர்கள் வம்சாவழியில் வந்த சங்கரன் நம்பூதிரி குருவாயூரப்பன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் தினமும் இந்த கணபதி கோயில் முன் அமர்ந்து, கிருஷ்ணனின் பெருமைகளை பற்றி வேதவியாசரால் அருளப்பட்ட பாகவதத்தை பாராயணம் செய்து வந்தார்.

இவரது பக்திக்கு மகிழ்ந்த கிருஷ்ண பகவான் கணபதியின் மடியில் இணைந்து கொண்டார். இவரை கணபதி தன் துதிக்கையால் அரவணைத்திருப்பதை பார்த்தால் மெய்சிலிர்க்கும்.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கர்ப்பக்கிரகத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில், காக்கும்கடவுளான கிருஷ்ணன் அமர்ந்திருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar