ஆடி அமாவாசை இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழா . ஆடி அமாவாசையன்று இலாமிச்ச வேர் சப்பரத்தில் சேர்மன் திருக்கோலத்தில் எழுந்தருளுவார்.
தல சிறப்பு:
பிரசாதமாக கோயில் திருமண்ணும் தண்ணீரும் தருகிறார்கள்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி,
ஏரல் - 628 801
தூத்துக்குடி மாவட்டம்.
போன்:
+91- 4630-271 281
பொது தகவல்:
நவ திருப்பதிகளும், திருச்செந்தூர் தலமும் அருகில் உள்ளன.
பிரார்த்தனை
சித்த பிரம்மை பிடித்தவர்கள் இங்கு வந்து தங்கி வழிபட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள் ளது ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில்.
தல வரலாறு:
சேர்மன் அருணாசல சுவாமிகள்,திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியில் ராமசாமி-சிவனனைந்த அம்மையாருக்கு 1880, அக்டோபர் 2ல் அவதரித்தார். இவரது பெற்றோர், பல கலைகளை சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். இவரும் அனைத்து கலைகளையும் கற்ற சுவாமிகள், ஏரல் என்ற ஊருக்கு வந்து மவுன விரதம் இருந்து பக்தி யோகத்தை கடைப்பிடித்தார். அவரைக்காண வந்த பொதுமக்களுக்கும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதல் கூறி, அவர்களது பிரச்னைகளை தீர்த்து வந்தார். இவரது நீதியையும், நேர்மையையும், திறமையையும் கண்ட அப் போதைய ஆங்கில ஆட்சியாளர்கள், இவரை ஏரல் பேரூராட்சியின் சேர்மனாக பதவி ஏற்கும்படி வேண்டினார்கள். 1906, செப்டம்பர் 5ல் சேர்மனாக பதவி ஏற்றார். 1908, ஜூலை 27 வரை சேர்மனாக பணியாற்றிய அவர் "சேர்மன் அருணாசலம்' என்ற பெயரைப் பெற்றார்.தனது 28வயது வரையிலும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு நாள் இவர் தனது சகோதரர் கருத்தப் பாண்டியனை அழைத்து அவருக்கு நல்லாசி கூறி, "" தம்பி! நான் 1908, ஜூலை 28 ஆடி அமாவாசை பகல் 12 மணிக்கு இறைவன் திருவடி சேருவேன். ஏரலுக்கு தென்மேற்கில் தாமிர பரணி ஆற்றின் வடகரை ஓரமாக நிற்கும் ஆலமரத்தின் அருகில் தன்னை சமாதியில் வைத்து மலர்களும் மண்ணும் போட்டு மூடுங்கள். அப்போது மேலே கருடன் வட்டமிடும்,'' என்று கூறினார். அதன்படியே அவர் இறைவனை அடைந்தார். அவர் கூறியபடியே அவரது தம்பியும் செய்தார். அன்று முதல் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிகள் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அருளாசி வழங்கி வருகிறார். குறிப்பாக மன நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் இங்கு வந்து தங்கி குணமடைந்து செல்கிறார்கள். பிரசாதமாக கோயில் திருமண்ணும் தண்ணீரும் தருகிறார்கள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பிரசாதமாக கோயில் திருமண்ணும் தண்ணீரும் தருகிறார்கள்.
இருப்பிடம் : தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ஏரல் உள்ளது. திருநெல்வேலி மற்றும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அடிக்கடி பஸ் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
தூத்துக்குடி
அருகிலுள்ள விமான நிலையம் :
தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம்