பதிவு செய்த நாள்
03
டிச
2019
02:12
குளித்தலை: அய்யர்மலை, ரெத்தினகிரீஸ்வரர்கோவிலில், மூன்றாம் சோம வார நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். குளித்தலை அடுத்த, சத்தியமங்லம் பஞ்., அய்யர்மலையில், 108 சிவதலங்களில் மேற்கு நோக்கி அமைய பெற்ற சிவதலம் உள்ளது. 1,017 படிகட்டுகளை கொண்ட மலை உச்சியில், சுரும்பார் குழலி உடனுறை ரெத்தினகிரீஸ் வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இங்கு கார்த்திகை மாதத்தில், ஒவ்வொரு திங்கட்கிழமையன்று நடைபெறும், சோமவார விழா க்கள், சித்திரையில், 13 நாட்கள் நடைபெறும் தேர்த்திருவிழா மற்றும் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலங்களில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். நேற்று (டிசம்., 2ல்) மூன்றாம் சோமவார நிகழ்ச்சியில் கோவில் குடிப்பாட்டுக் காரர்கள், பக்தர்கள், பொது மக்கள் மலை அடிவாரத்தில் உள்ள பொன்னிடும் பாறையில், சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள் தங்கள் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட தானியங்களை, பொன்னிடும் பாறை மற்றும் கோவில் முன் படிக்கட்டில் கொட்டினர்.