பதிவு செய்த நாள்
22
டிச
2019
08:12
காஞ்சிபுரம்: சகலசித்தி சபரிவாசன் அய்யப்பா சபாவின், மூன்றாம் ஆண்டு மலர் பூஜை விழா, இன்று காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது.விழாவையொட்டி, காஞ்சிபுரம் ஆடிசன்பேட்டை செட்டிதெரு, சகலசித்தி விநாயகர் கோவிலில், இன்று காலை, 6:00 மணிக்கு, மூலவர் சகலசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து, அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறுகிறது. காலை, 9:30 மணிக்கு சிறப்பு அர்ச்சனையும், அய்யப்ப பக்தர்கள் பங்கேற்கும் பஜனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பகல், 12:00 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.