ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், பங்குனி மாத முதல் செவ்வாய் கிழமையையொட்டி, ரோஜா, சாமந்தி, சம்பங்கி மாலை அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்தார்.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருபாளிக்கிறார். இக்கோவிலில், பங்குனி மாத முதல் செவ்வாய் கிழமையான இன்று அதிகாலை 4:00 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு கோ–பூஜை நடந்தது. தொடர்ந்து, முலவருக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி, உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், மஞ்சள் சாமந்தி மாலை அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகத்தை தொடர்ந்து, ரோஜா, சாமந்தி, சம்பங்கி மாலை அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல், சண்முகருக்கு சத்ரு சங்கார திரிசதீ யாகமும் அர்ச்சனை நடைபெற்றது. பங்குனி மாத முதல் செவ்வாயையொட்டி, ஏராளாமன பக்தர்கள் வரிசையில் வந்து, அரோகரா, அரோகரா என்று கோஷமிட்டு முருகப்பெருமானை வழிப்பட்டனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் மற்றும் கோவில் அதிகாரிகாரிகள் செய்திருந்தனர்.