சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். நேற்று மார்கழி அமாவாசையை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. 12:00 மணிக்கு சுவாமி வெள்ளி கவசத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.