மேலுார்: மேலுார் சுந்தரராஜன்பட்டியில் பொங்கல் மண் பானை விற்பனை களைகட்ட ஆரம்பித் துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இக்கிராமத்தைச் சேர்ந்த நல்லையன் 48, முப்பது ஆண்டுகளாக பானை தயாரித்து வருகிறார்.
அவர் கூறியதாவது: அழகர்கோவில் மலையில் இருந்து வரக்கூடிய மூலிகை தண்ணீர் தேங்கும் கண்மாயில் இருந்து மணலை சேகரித்து செய்வதால் இந்த பானைகளுக்கு மவுசு அதிகம். ஒரு படி வரை பொங்கல் பானைகளும், பிற நாட்களில் வீட்டுக்கு தேவையான பானைகள் மற்றும் மண் அடுப்பு உட்பட அனைத்து மண் பாண்டங்களும் தயாரித்து ரூ.45 முதல் ரூ.120 வரை விற்கிறேன் என்றார்.