சென்னிமலை முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2019 02:12
சென்னிமலை: மார்கழி அமாவாசையை முன்னிட்டு, சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று 25ல் காலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கோமாதா பூஜை நடந்தது. பிறகு, மார்கழி மாத விழா குழுவினர் சார்பில் சிறப்பு வழிபாடு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் இரவு வரை நடந்தது. அப்போது முருகப்பெருமான் மூலவர், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளி த்தார். நேற்று 25ல் விடுமுறை தினமாக இருந்ததால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று, முருகனை தரிசனம் செய்தனர். முருகன் சன்னதிக்கு பின்புறம் உள்ள வள்ளி - தெய்வானை, தன்னாசியப்பன் கோவில்களிலும் பூஜைகள் நடந்தன. பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் பஸ்களை கூடுதல் முறை மலைகோவிலுக்கு இயக்கப்பட்டது.