கோவை ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2025 07:12
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.இதில் உற்சவர் ஸ்ரீ ராமர் லக்ஷ்மணர், சீதை ஆகியோரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு வந்தனர்.முன்னதாக மூலவர் ராமபிரான் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம். பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர் நிகழ்வாக உற்சவர் கோவில் மண்டபத்தில் எழுந்தருளினார். அதை தொடர்ந்து காலை 6.30மணி அளவில் சேஷ வாகனத்தில் திருவீதி உலா வந்தார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை அதை சுற்றியுள்ள பெருமாள் - ராமர் -லட்சுமி நரசிம்மர் ஆகிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.