காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2025 07:12
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில், பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே கோவிலான அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, இன்று காலை 5:30 மணிக்கு திறக்கப்பட்ட சொர்க்கவாசலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உத்சவர் ஆதிகேசவ பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து, மாட வீதிகளில் உலா வந்த பெருமாள், கோவில் வளாகத்தில் கருங்கற்களால் புதிதாக கட்டப்பட்டுள்ள தோட்ட மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.