விழுப்புரம் ஐயப்ப சேவா சங்கம் சபரிமலைக்கு பொருட்கள் அனுப்பல்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2019 01:12
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானத்திற்கு பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட தலைவர் டாக்டர் ரவி தலைமை தாங்கினார். செயலர் பாலகணேஷ், பொருளாளர் காணை செல்வராஜ், சுமங்கலி ரவி, சிவ தனசேகரன் முன்னிலை வகித்தனர். இதில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் ஜனவரி 2 மற்றும் 3 தேதிகளில் நடைபெறும் அன்னதானத்திற்கு லாரி மூலம் பொருட்கள் அனுப்பப்பட்டது.