பதிவு செய்த நாள்
30
டிச
2019
02:12
மல்லசமுத்திரம்: காளிபட்டி கந்தசாமி கோவிலில், தைப்பூச தேரோட்ட விழாவிற்கு, கடைகள் அமைப்பதற்காக தற்காலிக கொட்டகை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மல்லசமுத்திரம் அருகே, காளிபட்டியில் பிரசித்தி பெற்ற கந்தசாமி எனும் பெயரில் முருகன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், அமாவாசை, சஷ்டி, கிருத்திகை, தைப்பூசம், உத்திரம் போன்ற தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதன்படி, வரும், பிப்., 8ல், தைப்பூச தேரோட்ட விழா நடக்க இருப்பதையொட்டி, கோவில் முன்புறத்தில் கடைகள் அமைப்பதற்காக தற்காலிக கொட்டகை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கோவிலின் உட்பிரகாரங்களிலும் வர்ணம் தீட்டும் பணி நடக்கிறது. இரண்டு மாதங்களுக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவர்.