புத்தாண்டு பிறப்பு கந்தசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2020 12:01
திருப்போரூர்:ஆங்கில புத்தாண்டு பிறப்பினை ஒட்டி திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று கந்தனை பரவசத்துடன் வழிப்பட்டனர். திருப்போரூர் அறுபடை வீட்டிற்கு நிகரான பிரசித்திப்பெற்ற கோவிலாக கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் புத்தாண்டு பிறப்பினை ஒட்டி மூலவர் சுயம்பு மூர்த்தியான கந்தபெருமான் பட்டு வஸ்த்திரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தகள் மகிழும் நிலையில். கருவரை முகப்பில் வண்ணமலர்களலால் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தது.