பதிவு செய்த நாள்
09
ஜன
2020
01:01
வால்பாறை, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த பிரதோஷ பூஜையில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, மார்கழி மாதம் இரண்டாவது பிரதோஷ பூஜையான நேற்று மாலை, 5:30 மணிக்கு, பால், தயிர், மஞ்சள், இளநீர், தேன், தயிர், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது.தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. அதன்பின், ரிஷப வாகனத்தில் சிவபெருமான் தேவியருடன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புதன்கிழமையான நேற்று மாலை நடந்த பிரதோஷ பூஜையில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.