பதிவு செய்த நாள்
09
ஜன
2020
01:01
அவிநாசி: அவிநாசி அருகே வஞ்சிபாளையம், முருகம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று நடந்தது. கடந்த, 7ம் தேதி இரவு பொட்டுச்சாமி பொங்கல் வைத்து பூஜை வைத்து,கிழக்கு விநாயகர் கோவிலில் இருந்து கும்பம் அலங்கரித்து, அம்மன் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
விழாவில், நேற்று காலை ஸ்ரீ மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. நேர்ந்து கொண்ட பக்தர்கள். வேல் எடுத்து, மெரவனை ஊர்வலமாக சென்றனர். அதன்பின், இரவு, 10:00 மணிக்கு மாவிளக்கு, வாண வேடிக்கை, இன்னிசை கச்சேரி, கிராமிய கலைநிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 4:00 மணிக்கு பொங்கல் மெரமனை எடுக்கப்படுகிறது. நாளை மஞ்சள் நீராட்டு விழாவுடன், பொங்கல் விழா நிறைவடைகிறது. பொங்கல் விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.