பதிவு செய்த நாள்
26
ஏப்
2012
11:04
உடன்குடி: உடன்குடி அருகே தாண்டவன்காடு ஆதிநாராயண சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. தாண்டவன்காடு ஆதிநாராயண சுவாமி (இராஜாங்கோயில்) மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து பிரம்மச்சாரி பூஜை, கஜபூஜை, திரவ்யாஹீதி, பூர்ணாஹீதியும், நவக்கிரஹபூஜை, சாந்தி பூஜை, ஹோமம், குபேரலஷ்மி பூஜை, கோபூஜை, தனபூஜை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை நடந்தது. மாலையில் தீர்த்த சங்கரஹணம், கங்கை அழைப்பு, தீர்த்தம் எடுத்து யானை மீது பவனி வருதல், மிருத் சங்கரஹணம், வாஸ்து சாந்தி பிரவேசபலி, திக்பலி பூஜை, அங்குரார்பண பூஜை, பாலிகா ஸ்தாபனம், ஆச்சார்ய ரக்ஷா பந்தனம், வஸ்த்ர மரியாதை செய்தல், கும்ப அலங்காரம், கலாஹர்ஷணம், கும்பம் யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜையும், வேதிகார்ச்சனை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், ஹோமம், திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி தீபாராதனையும், இரவு பக்தி பட்டி மன்றமும் நடந்தது. 24ம் தேதி காலை இரண்டாம் காலயாகசாலை பூஜை, ஆச்சார்ய விசேஷசந்தி பூஜை, பாவனா அபிஷேகம், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜை, சமயசொற்பொழிவு, சுக்கிரஹோரையில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் யந்த்ரஸ்தாபனம், ரத்னந்யாசம், அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று (25ம் தேதி) காலை நான்காம் கால யாகசாலை பூஜை, யாகசாலையில் இருந்து கடம் எழுந்தருளி முதலில் விநாயகர், ஆதிநாராயணன், பத்திரகாளி அம்மன், குலசேகரநாயகி, சங்கிலி பூதத்தான், நவக்கிரகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு விமான கும்பாபிஷேகம் நடந்தது. இதில் தாண்டவன்காடு துரைராஜி, சௌந்திரகனி அம்மாள், குருநாதன் ஸ்டோர்ஸ் ஆதிபாண்டி, ஓய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரி கோபாலகிருஷ்ணன், ஆதித்தியா பைனான்ஸ் திலகராஜ், அருள்செல்வன், ஜெயவிஜயன், சிவக்குமார், கேசவன், இளையபெருமாள், ஜே.கே.மெட்டல் கணேசன், செந்தில்ராஜ், சிவக்குமார், கிருஷ்ணகுமார், பெருமாள்ராஜ், ஆனந்தம், முத்தாரம்மன் டிரேடர்ஸ் தங்கரவி, கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் உடன்குடி மனோகரன், சந்தையடியூர் ரவிராஜா, திருவள்ளுவர் மாவட்ட இளைஞர் காங்., இடையர்காடு பிரகாஷ், திருச்செந்தூர் சட்டசபை தொழுதி காங்., தேசிய தலைவர் பிச்சிவிளை சுதாகர், செல்வம் ஜுவல்லரி சண்முகசுந்தரம், சிவா டிரான்ஸ்போர்ட் ராஜேந்திரன், பெரியபுரம் வேல் ஆதித்தன், உடன்குடி பஞ்., யூனியன் கவுன்சிலர் பிரபாகர் முருகராஜ், மாதவன்குறிச்சி பஞ்., துணைத்தலைவர் ராமசேகர், கிளைச் செயலாளர் சுந்தர், உடன்குடி வட்டார வியாபாரிகள் சங்க செயலாளர் சுதாகர், ஜெயமோட்டார் சூரியநாராயணன், ஜே. ஏ.ஜே.ஆட்டோக்களில் செயலாளர் சுதாகர் உட்பட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பகலில் சகல திரவ்வியங்களால் மஹா அபிஷேகம், மஹேஸ்வர பூஜை, திருக்கல்யாணம், சகஸ்கரநாமார்ச்சனை, திருவிளக்கு பூஜை, புஷ்பாஞ்சலி அலங்கார பூஜை, இரவு ஆதிநாராயணசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி தெருவீதி உலாவும் நடக்கிறது. இரவு திரைப்பட கச்சேரி நடந்தது. இன்று முதல் மண்டல பூஜை துவங்கி வரும் ஜூன் 12ம் தேதி வரை நடக்கிறது. ஏற்பாடுகளை ஆதிநாராயண சுவாமி கோயில் மஹா கும்பாபிஷேக திருப்பணிக்குழு மற்றும் தாண்டவன்காடு ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.