மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீட அலங்கார தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2020 01:01
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று (ஜன.,24) மூலஸ்தான அம்மனுக்கு காலை 7:30 மணி முதல் 10:30 மணி வரை, மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை வைரக்கிரீடம், தங்க பாவாடை அலங்காரம் செய்விக்கப்பட்டு தரிசனம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.