பதிவு செய்த நாள்
24
ஜன
2020
01:01
சின்னமனுார், தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் டிச.27 ல் தான் சனிப்பெயர்ச்சி விழா நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தை அமாவாசையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் சனிபெயர்ச்சி விழா இன்று நடைபெறவுள்ளதாக, சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. பக்தர்கள் கோயில் நிர்வாகத்தையும், அர்ச்சகர்களையும் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தனர். இதையடுத்து, டிச., 27 ல் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது என கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கோயில் உதவி அர்ச்சகர் சிவக்குமார் கூறுகையில், திருக்கணித பஞ்சாங்க முறையில் ஜன., 24ல் சனிப்பெயர்ச்சி என்று கூறுகின்றனர். வாக்கிய பஞ்சாங்க முறையில் டிச., 27 ஞாயிறு அதிகாலை 5:22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியாகிறார். அன்று தான் திருநள்ளாறு, குச்சனுார், திருக்கொள்ளிகாடு உள்ளிட்ட தலங்களில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும்,என்றார்.