Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சப்பளம்மா தேவி கோவில் திருவிழா: 15 ... ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி:  2000 மாணவியர் பரதம் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி: 2000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் 7ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2020
10:01

கிருஷ்ணகிரி: எலுமிச்சங்கிரி கிராமம், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், ஏழாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த, எலுமிச்சங்கிரி கிராமம், சென்றாய சுவாமி குன்றின் அடிவாரத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், ஏழாம் ஆண்டு மற்றும் மலேசியா முருகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சக்தி லலிதாம்பிகை கோவில், மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, சுத்தி புண்ணியாதானம், கணபதி ஹோமம், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு காயத்ரி ஹோமம், முதல் கால வேள்வி பூஜை, இரண்டாம் கால வேள்வி பூஜை ஆகியவை நடந்தன. நேற்று காலை, 3:00 மணிக்கு வேள்வி பூஜையும், 5:00 மணிக்கு அபிஷேகமும், வெண்ணை காப்பு அலங்காரமும் நடந்தன. காலை, 8:00 மணிக்கு ஊர்மக்கள் சீர்வரிசையை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு படைத்தனர். தொடர்ந்து மஹா தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தர்மகர்த்தா ராமன், முருகர் கோவில் தர்மகர்த்தா வெங்கட்டாசலம், ஊர்மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar