வால்பாறை: பூமாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த திருக்கல்யாணத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை அடுத்துள்ளது நடுமலை எஸ்டேட். இங்குள்ள பூமாரியம்மன், காளியம்மன் கோவில், 60ம் ஆண்டு திருவிழா கடந்த , 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடைபெற்று வரும் விழாவில் காலை,10:30 மணிக்கு மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர். அதன் பின் காலை 12 :30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது . இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுவாமி திருவீதி உலா. க நடுமலை எஸ்டேட் தெற்கு டிவிஷன் மதுரைவீரன் திருக்கோவில், 137 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடைபெற்று வரும் விழாவில் இன்று காலை, 11:00 மணிக்கு மதுரை வீரன் சுவாமி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.