பதிவு செய்த நாள்
30
ஜன
2020
10:01
ராமேஸ்வரம்,: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் 1.23 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தினர்.
ராமேஸ்வரம் கோயிலில் டிச.24க்கு பிறகு நேற்று ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்களை கோயில் ஊழியர்கள் திறந்தனர்.பின் உண்டியல் காணிக்கையை கோயில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் கோயில் கல்யாண மண்டபத்தில் கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், மேலாளர் முருகேசன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணி, கக்காரின், பஷே்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலைசெல்வன், கண்ணன், கோயில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், கோயில் ஊழியர்கள் பலர் எண்ணினர். இதில் 1 கோடியே 23 லட்சத்து 45 ஆயிரத்து 774 ரூபாயும், தங்கம் 64 கிராம், வெள்ளி 2 கிலோ 822 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இக்காணிக்கையை இணை ஆணையர் உத்தரவின் படி அரசு வங்கியில் டிபாசிட் செய்தனர்.