Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீருபண்ணம்மாள் கோயிலில் ... சஷ்டி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிரீடம் செய்த கிருஷ்ணன் கதை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2020
11:02

பழநி: -வேகம் மட்டுமின்றி விவேகமும் இருந்தால்தான் இந்த காலத்தில் பிழைக்க முடிகிறது. கல்வி அறிவு குறைந்திருந்த அந்நாட்களில் எல்லா பணியையும் உடலுழைப்பாலேயே நிறைவேற்றி வந்தனர். ஆனால் இக்காலத்தில் இயந்திர கதியில் ஓடி, தேவைகளையும் இயந்திரத்தனமாகவே நிறைவேற்றுகின்றனர். இந்த நிலை ஆபரண தயாரிப்பையும் விட்டு வைக்கவில்லை. பத்து விரல்களிலும் கலைகளை பதுக்கி வைத்திருக்கும் நகை தயாரிப்பாளர்கள், தங்கம், வெள்ளியில் நுணுக்கமான, நயமான ஆபரணங்களை வடிவமைத்தனர். ஆனால் காலச் சக்கர வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கலங்கிப் போய் நிற்கின்றனர்.


பழநியின் படைப்பாளி கிருஷ்ணனும் 95, இத்தகையவர்களில் ஒருவர்தான்.அவர் கூறியதாவது: 1928ல் உடுமலையில் பிறந்தேன். தங்கம், வெள்ளியில் பட்டயங்கள், கிரீடங்கள், தெய்வ ஆபரணங்கள் முதல் எல்லாவற்றையும் கையால் கலையம்சத்துடன் செய்வேன். நாட்ராம்பள்ளி சென்னாசாரியார் எனது குரு. 1942ல் 15வது வயதில் தொழிலில் புகுந்து, தாராபுரத்தில் 4 ஆண்டுகள் காலநேரம் பார்க்காமல் கற்றேன்.1946 முதல் பழநியில் இருந்து ஆபரணங்களை செய்தேன். ஒரு உருவத்தை தங்கத்தால் வடிக்கவும், தங்க கிரீடத்தை ஆபரண கற்கள், அழகிய எனாமல் வரிகள் கொண்டு கையாலேயே செய்து விடுவேன். தங்கம், வெள்ளியில் ஒருவருடைய உருவத்தை வடிவமைக்கும் அளவுக்கு திறமை இருக்கிறது. இதனால் ஏ.வி.எம்., ஸ்டூடியோவுக்கு கூட செய்து கொடுத்துள்ளேன்.ஒரு முருகன் கோயிலுக்கு கற்கள் பதித்த வெள்ளி கிரீடம் செய்தது இன்றும் மறக்க முடியாது.

அன்று ஒருவர் நகை செய்யப் போகிறார் என்றால், எங்களை அத்தனை மரியாதையாக நடத்துவர். இப்படி வேண்டும், அப்படி வேண்டும் என எங்கள் திறமைக்கு சவால் விடுவர். அதற்கு நாளானாலும் காத்திருந்து பெறுவர். இப்போது அப்படியா... இந்தத் தொழில் இயந்திரத்திற்கு அடிமைப்பட்டு விட்டது.நினைத்த மாத்திரத்தில் கடைக்கு சென்று உடனே வாங்கிச் சென்று விடுகின்றனர். இதனால் இந்தக் கலையும் காலத்தால் கரைந்து கொண்டிருக்கிறது. இன்று கையால் செய்பவர்கள், மாவட்ட அளவிலும் யாருமில்லை, என்றார். இவரை 97882 35337ல் தொடர்பு கொண்டு பேசலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar