குருவாயூர் கோவிலில் சங்கீத உற்சவம் செம்பையில் இருந்து தம்புரா புறப்பாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2026 10:11
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஆண்டுதோறும், கார்த்திகை மாதம் ஏகாதசி உற்சவம் நடக்கிறது. நடப்பாண்டு உற்சவம், வரும் நவ. 21ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, குருவாயூர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று துவங்குகிறது. கோவில் வளாகத்தில் உள்ள மேல்புத்தூர் கலையரங்கில், மாலை, 6:00 மணிக்கு நடக்கும் உற்சவத்தை, தேவசம் துறை அமைச்சர் முரளிதரன் துவக்கி வைக்கிறார். இந்து ஆண்டு செம்பை நினைவு விருது மிருதங்க வித்வான் டி.கே. மூர்த்திக்கு, அமைச்சர் முரளிதரன் வழங்குகிறார். அதன்பின், அவரது சங்கீதக் கச்சேரி அரங்கேறு கிறது.
15 நாட்கள் நடக்கும், சங்கீத உற்சவத்தில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங் கேற்கின்றனர். முன்னதாக, நேற்று மாலை, 6:00 மணிக்கு பாலக்காடு செம்பையில் இருந்து வைத்தியநாத பாகவதரின் தம்புரா வாகன ஊர்வலமாக குருவாயூருக்கு புறப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மண்ணூர் ராஜகுமாரனுன்னி குழுவினரின் சங்கீதக் கச்சேரி நடந்தது. அதன்பின், செம்பை வித்யா பீடத் தலைவர் சுரேஷ், செயலாளர் முருகன் ஆகியோரிடம் இருந்து, குருவாயூர் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் கோபிநாத், உறுப்பினர் பிரஹ்மஸ்ரீ மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு,, நிர்வாகி ஹரிகோபால், துணை நிர்வாகி பினு, ராதா, செம்பை சங்கீத உற்சவ கமிட்டி உறுப்பினர்கள் தம்புராவை பெற்றுக்கொண்டனர். குருவாயூர் கோவில் விழா மேடையில் இன்று மாலை தம்புரா பிரதிஷ்டை செய் யப்படுகிறது.