சண்முகநாதன் கோயில் திருப்பணிக்கு பூமி பூஜை துணை முதல்வர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2020 11:02
உத்தமபாளையம்:ராயப்பன்பட்டி மலையடிவாரத்தில் உள்ள சண்முகநாதன் கோயில் திருப்பணி செய்து, குடமுழுக்கு பண்ணுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ராயப்பன்பட்டி மலையடிவாரத்தில் சண்முகநாதன் கோயில் புராதானமானதும், பிரசித்தி பெற்றது. இக்கோயில் எப்போது திருப்பணிநடந்தது என யாருக்கும் தெரியாது. எரசக்கநாயக்கனுார் ஜமீன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என செவிவழி செய்தியாக கூறுகிறது.சமீபத்தில் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ரகுபதி முயற்சியால், இந்த கோயிலில் தினமும் பூஜைகள், தைப்பூசம், பங்குனி உத்தர நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தது. கடந்தாண்டு இந்த கோயிலிற்கு வாகனங்கள் செல்ல வனத்துறை அனுமதிக்காமல் பிரச்னை செய்தனர். இப் பிரச்னை தற்பொழுதும் உள்ளது.இருந்தும், கோயிலை புனரமைப்பு செய்து, குடமுழுக்கு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி முனைப்புடன் செயலாற்றி வருகிறார். தைப்பூச நாளில், இங்கு கோயில் திருப்பணிக்கான பூமி பூஜை நடந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஓய்வு பெற்ற டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.முருகேசன், ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆர்.ரகுபதி,ஜக்கையன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்களும் பங்கேற்றனர். விரைவில்திருப்பணிகள் பணிகள் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.