காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் கனு உத்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2026 11:01
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் கனு உத்சவம் நிறைவையொட்டி, காமாட்சியம்மன், லட்சுமி, சரஸ்வதி தேவியருக்கு காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு அபிஷேகம் செய்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் கனு உத்சவம் கடந்த 10ம் தேதி துவங்கியது. உத்சவத்தையொட்டி, கனு மண்டபத்தில், காமாட்சியம்மன், லட்சுமி, சரஸ்வதி தேவியருக்கு தினமும் அபிஷேகம் நடந்தது. கனு உத்சவம் நிறைவு நாளான நேற்று முன்தினம் காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காமாட்சியம்மன், லட்சுமி, சரஸ்வதி தேவியருக்கு 16 விதமான பழச்சாறுகள், திரவியங்கள், மூலிகைகள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்தார். தொடர்ந்து, ஸ்தானீகர்களால் புஷ்பாஞ்சலியும் நடத்தப்பட்டது. இளையமடாதிபதி சத்ய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடனிருந்தார்.