Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை ஈஷாவில் மாட்டுப்பொங்கல் விழா ... நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர், கைலாசநாதர் கோவில்களில் சிறப்பு பூஜை நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் மாட்டு பொங்கல் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் மாட்டு பொங்கல் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

17 ஜன
2026
08:01

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.


பாகூரில் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின், மூலவர் கோபுரத்தில் இந்திர நந்தி, பிரம்ம நந்தி, விஷ்ணு நந்தி, தரும நந்தி, அர்த்த மண்டபத்தில் ஆத்ம நந்தி, ரிஷப நந்தி, மூலவர் எதிரே அதிகார நந்தி மற்றும் கொடிமரம் அருகே வடக்கு திசை நோக்கி செவி சாய்த்து அருள்பாலிக்கும் செல்வ நந்தி என, மொத்தம் எட்டு நந்தி பெருமான்கள் அருள்பாலித்து வருவது இக்கோவிலின் சிறப்பாகும். மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி, எட்டு நந்தி பெருமான்களுக்கும் நேற்று சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து, காய்கறிகள், பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், அர்ச்சகர்கள் சங்கர நாராயணன், லட்சுமி நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar