Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

கடகம்: (புனர்பூசம் 4,  பூசம், ஆயில்யம்) வாகன யோகம் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) முயற்சியில் வெற்றி கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ஆடம்பர வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2020
16:09

சிந்தனை சிற்பிகளாகத் திகழும் சிம்ம ராசி நேயர்களே!


இந்த மாதம் சுக்கிரன், குரு, ராகுவால் நன்மை உண்டாகும். புதன் பிப்.22 – மார்ச் 11 வரை நற்பலன் கொடுப்பார். சுக்கிரனால் ஆடம்பர வசதிகள் பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர்.அவர்களால் நற்சுகம் கிடைக்கும்.

குடும்பத்தில் ராகுவால் பொன், பொருள் சேரும். தொலைதுாரத்தில் இருந்து எதிர்பார்த்த சுபசெய்தி கிடைக்கும். சகோதரிகள்  ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். புதனால் குடும்பத்தில் நிலவிய குழப்பம்,  மனைவி வகையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முதலியன பிப்.21 க்கு பிறகு மறையும். அதன் பிறகு கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  வீட்டிற்கு தேவையான சகல வசதியும் பெறுவீர்கள். குடும்பத்தில் தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பெண்களால் குடும்பம் சிறப்படையும். தோழிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். குடும்ப பெரியோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்க வாய்ப்புண்டு. பிப்.21க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மார்ச்11க்கு பிறகு விட்டுக் கொடுத்து போகவும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு அவப்பெயர் வரலாம். செவ்வாயால் பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் முக்கிய பொறுப்புகளை பெண்கள் வசம் ஒப்படைத்து நற்பலன் காண்பர்.  பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். தங்கம், வெள்ளி, வைர வியாபாரம் செய்பவர்கள் அதிக ஆதாயம் காண்பர்.
* தரகு, கமிஷன் தொழிலில் வருமானம் உயரும். கடந்த காலத்தில் நிலவிய வீண் பகை மறையும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் பிப்.22 –  மார்ச் 11 வரை நல்ல வளர்ச்சி காண்பர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். சிலர் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக பெண் ஊழியர்கள்  ஆதரவுடன் இருப்பர்.
* ஐ.டி., துறையினருக்கு கோரிக்கைகள் நிறைவேறும். மாத இறுதியில் சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம்.
* மருத்துவர்களுக்கு பெண்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை உருவாகும்.
* வக்கீல்கள் பிப். 22 – மார்ச் 11 வரை தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* ஆசிரியர்கள், குருபகவான் சிறப்பாக அமைந்துள்ளதால் பிரச்னைகளை முறியடித்து வெற்றிக்கு வழிகாண்பர்.  
* அரசியல்வாதிகளுக்கு எதிரி தொல்லை மறையும்.
* கலைஞர்கள் உற்சாகமாக செயல்படுவர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். உங்களின் முன்னேற்றத்திற்கு பெண்கள்  உறுதுணையாக இருப்பர்.
* விவசாயிகள் கிழங்கு வகைகள், நிலக்கடலை, மஞ்சள், உளுந்து, கேழ்வரகு, பழவகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானம் கிடைக்கப் பெறுவர். கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நற்பலன் காண்பர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். கல்விக்கடன், கல்வி உதவித்தொகை போன்றவை கிடைக்கும்.

சுமாரான பலன்கள்
* வியாபாரிகள் வாடிக்கையாளர் மத்தியில் அவப்பெயருக்கு ஆளாகலாம். அவ்வப்போது மனதில் இனம் புரியாத வேதனை குடி கொண்டிருக்கும்.
* அரசு பணியாளர்கள் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் அனுசரித்து போகவும். முக்கிய முடிவு எடுப்பதை தள்ளிப் போடுவது நல்லது.
* தனியார் பணியாளர்களுக்கு மார்ச் 11க்கு பிறகு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் அதற்குரிய பலன் எதிர்காலத்தில் கிடைக்காமல் போகாது.
* அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். வேலையில் பளுவை சந்தித்தாலும் திருப்தியும், நிம்மதியும் காண்பீர்கள்.
* விவசாயிகள் மார்ச் 11க்கு பிறகு வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

நல்ல நாள்: பிப்.14,15,21,22,23,24,25, மார்ச்1,2,3,4,5,8,9,12,13
கவன நாள்: பிப்.26,27 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5,7 நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* செவ்வாயன்று முருகனுக்கு அர்ச்சனை
* வெள்ளியன்று துர்கைக்கு நெய் விளக்கு

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
குரூர புத்தி படைத்த ஒருவன் வெடி வைத்துக் கொடுத்த அன்னாசி பழத்தைச் சாப்பிட்ட கர்ப்பிணி யானை கேரளாவில் ... மேலும்
 
temple
 புரி: புரி ஜெகநாதர் கோவிலில், முக கவசம் அணியாமல் அர்ச்சகர்கள் பூஜை செய்ததையடுத்து, கொரோனா பரவும் ... மேலும்
 
temple
புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 8-ம் தேதி அனைத்து வழிபாட்டு தலைங்கள் திறக்க அனுமதி ... மேலும்
 
temple
திருப்பதி; வரும், 11 முதல், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.ஒரு ... மேலும்
 
temple
சபரிமலை; சபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.கொரோனா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.