பதிவு செய்த நாள்
11
பிப்
2020
04:02
பெற்றோர் மீது அன்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே!
சூரியன் மாதம் முழுவதும் நற்பலன் தருவார். புதன் பிப்.21 வரையும், மார்ச் 11க்கு பிறகும், சுக்கிரன் பிப்.29க்கு பிறகும் நற்பலன் தருவர். முயற்சியில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். உறவினரிடம் சுமூகநிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினரின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடந்தேறும். பிப்.29 க்கு பிறகு ஆடம்பர வசதிகள் பெருகும். மனதில் சந்தோஷம் நிலைக்கும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். பிப்.22 – மார்ச் 11 வரை கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. சிறு சிறு பிரச்னைகள் வந்து மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம்.
பெண்களுக்கு தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பணிபுரியும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு. அக்கம்பக்கத்தினருடன் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். பிப்.29 க்கு பிறகு பெரியோர் ஆதரவு கிடைக்கும். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. செவ்வாயால் வயிறு பிரச்னை வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் பிப்.29 க்கு பிறகு அனுகூலமான காலகட்டமாக இருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் மூலம் ஆதாயம் அதிகரிக்கும்.
* வியாபாரிகள் பிப்.29க்குப் பிறகு நல்ல வளர்ச்சி காண்பர். எதிரிகளால் ஏற்பட்ட முட்டுக்கட்டை விலகும். சேமிக்கும் விதத்தில் பொருளாதார வளம் பெருகும்.
* தரகு, கமிஷன் தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் மார்ச்11க்கு பிறகு வீடு திரும்புவர்.
* தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு மார்ச்11க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் கூடுதல் நன்மை கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர்.
* ஐ.டி., துறையினருக்கு பிப்.29க்கு பிறகு சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்
* ஆசிரியர்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையிருக்காது.
* மருத்துவர்களுக்கு சிறப்பான நன்மை காத்திருக்கிறது. பணியிடத்தில் திறமை பளிச்சிடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
* வக்கீல்களுக்கு மார்ச் 11க்கு பிறகு பண விரயம், இடமாற்ற பீதி மறையும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* கலைஞர்கள் பிப்.29க்கு பிறகு உன்னத நிலைக்கு உயர்த்தப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விருது, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு.
* விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் காண்பர். நெல், கேழ்வரகு, பாசிப்பயறு மூலம் மகசூல் அதிகரிக்கும். மார்ச் 11க்கு பிறகு கால்நடை வளர்ப்பில் போதிய வருமானம் கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் ராகுவால் பொருள் இழப்பு வரலாம். கேதுவால் தீயோர் சேர்க்கையும் ஏற்படலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும்.
* வியாபாரிகளுக்கு பெண்கள் வகையில் இருந்த பிரச்னைகள் பிப்.29க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு பிப்.22 – மார்ச் 11 வரை வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.
* ஆசிரியர்கள் வீண் செலவைத் தவிர்த்து சிக்கனமாக இருப்பது நல்லது.
* அரசு பணியாளர்கள் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. விடாமுயற்சி எடுத்தால் தான் கோரிக்கைகள் நிறைவேறும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் வேலைப்பளுவால் உடல்நலக்குறைவுக்கு ஆளாகலாம்.
* அரசியல்வாதிகள் கடின உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். சிலர் தரம் தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் பண இழப்பைச் சந்திக்கலாம்.
* விவசாயிகளுக்கு சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பிப் 22 – மார்ச் 11 வரை மெத்தனமாக இருக்க வேண்டாம். அக்கறையுடன் படித்தால் தான் பலன் கிடைக்கும்.
நல்ல நாள்: பிப்.14,16,17,23,24,25,26,27 மார்ச் 4,5,6,7,10,11
கவன நாள்: பிப். 28,29 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: சிவப்பு, வெள்ளை
பரிகாரம்:
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
* செவ்வாயன்று முருகன் கோயில் தரிசனம்
* தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு தீபம்