பதிவு செய்த நாள்
03
மே
2012
11:05
குறிஞ்சிப்பாடி: வடலூர் அடுத்த கருங்குழியில் வள்ளலார் வணங்கிய ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வரும் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. வடலூர் அடுத்த கருங்குழியில் பழமை வா#ந்த ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு மகாலட்சுமியை தன் மடியில் வைத்துக் கொண்டு லட்சுமி நாராயணனாக அருள்பாலிக்கிறார். கோபில மகரிஷிக்கு காட்சி அளித்த வரலாறு இந்த கோவிலுக்கு உள்ளது. இந்தக் கோவிலில் வள்ளலார் வழிபாடு செய்துள்ளார். இந்த கோவில் வராஹ பெருமாள், ஆஞ்சநேயருக்கு சன்னதிகள் கட்டப்பட்டு, திருப்பணிகள் நிறைவடைந்து வரும் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதனையொட்டி நாளை (2ம் தேதி) மாலை யாக சாலை பூஜை பணிகள் தொடங்கி பகவத் அனுக்ஞை, விஷ்வக்சேன ஆராதனம், வாசுதேவ புண்ணியாக வாகனம், வேதப்ரபந்த துவக்கம், வாஸ்து சாந்தி, சோமகும்ப ஸ்தாபனம் நடக்கிறது. 3ம் தேதி காலை யாகசாலை நிர்மானம், துவாரபூஜை, காலஆகர்ஷணமும் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. அøனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு ஜலாவாஸம், பூர்ணாகுதி, கர்மாங்க ஸ்தபனம், திருமஞ்சனம், துவாரக பூஜை நடக்கிறது. 4ம் தேதி காலை சுப்ரபாதம், கோபூஜை, சாந்திஹோமங்கள், பூர்ணாகுதி யாகம் நிறைவடைந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு 10 மணிக்கு கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.