பதிவு செய்த நாள்
22
மார்
2020
02:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கொரோனா எதிரொலியால், மூடப்பட்ட அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்களின்றி, சனி மஹா பிரதோஷ வழிபாடு நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று, பங்குனி மாத, தேய்பிறை பிரதோஷ பூஜை நடந்தது.
இதை முன்னிட்டு, கோவில் கொடி மரத்தின் அருகில் உள்ள, அதிகார நந்தி, சுவாமி கருவறை எதிரில் உள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் உள்ள பெரிய நந்தி, உள்ளிட்டவற்றிற்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. இதில், பால், பன்னீர், மஞ்சள், இளநீர், எலுமிச்சை, சந்தனம், தேன் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, பல்வேறு வகையான பொருட்களால் அபி?ஷகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கொரோனா எதிரொலியால் கோவில் மூடப்பட்டதால், பக்தர்கள் யாரும் கோவிலினுள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்று பிரதோஷ பூஜை செய்தனர்.