கடலுார்: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கடலுார் பாடலீஸ்வரர் கோவிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சனி பிரதோஷத்தில் பக்தர்கள் வெளியில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ தினங்களில் பிரதோஷ நாயகர், நந்தி, பாடலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, சனி பிரதோஷத்தையொட்டி நேற்று மதியம் 3:00 மணிக்கு பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம் நடந்தது.மாலை 4:00 மணிக்கு நந்தி, பாடலீஸ்வரருக்கு விசேஷ திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. 5:00 மணிக்கு நந்தி, பாடலீஸ்வரருக்கு தீபாராதனை நடந்தது.கொரோனா நோய் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோவிலுக்குள் தரிசனத்திற்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.