திருவாலங்காடு : சிவன் கோவில் குளத்தில் இருந்த மீன்கள், மர்மமான முறையில் இறந்து தண்ணீரில் மிதிக்கின்றன. திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் கிராமத்தில் சிவன் கோவிலுக்கு சொந்தமான ஆதிகும்பேஸ்வரர் குளம் உள்ளது. இந்த குளத்தில், தற்போது தண்ணீர் உள்ளதால், நுாற்றுக்கணக்கான மீன்கள் உள்ளன.இந்த நிலையில், நேற்று முன்தினம், குளத்தில் இருந்த மீன்கள் மர்மமான முறையில் இறந்து தண்ணீரில் மிதந்தன.இது குறித்து கிராம மக்கள், திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பார்வையிட்டு, கோவில் குளத்தில், மர்ம நபர்கள் யாராவது, விஷம் கலந்ததால் மீன்கள் இறந்ததா, அல்லது குளத்து தண்ணீர் மாசுப்பட்டதால் மீன்கள் இறந்ததா என, விசாரிக்கின்றனர்.