சங்கப்புலவர் மாங்குடி மருதனாருக்கு அரசு சார்பில் மரியாதை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2020 03:04
திருநெல்வேலி:சங்கப்புலவர் மாங்குடி மருதனார் நினைவு துாணுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.சங்கப்புலவர்களில் ஒருவரான மாங்குடி மருதனார், சங்கரன்கோவில் அருகே மாங்குடியில் பிறந்தவர். அவர் இயற்றிய 13 பாடல்கள் சங்கப்பாடல்கள் தொகுப்பில் உள்ளன. பத்துப்பாட்டுகளில் ஒன்றான மதுரைக்காஞ்சியை இயுற்றியவர்.
அவருக்கு மாங்குடியில் நினைவுதுாண் 1992ல் ஏற்படுத்தப்பட்டது. பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த தினமான நேற்று தமிழ்கவிஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாங்குடியில் உள்ள மருதனாரின் நினைவு துாணுக்கு, தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் மலர் துாவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் முருகசெல்வி, தமிழ்வளர்ச்சித்துறை கண்காணிப்பாளர் கனகலெட்சுமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமச்சந்திரபிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி, பாலசுப்பிரமணியன், மாங்குடி மருதனார் தமிழ்மன்றத்தலைவர் மலைக்கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.