நாதஸ்வரத்தில் சங்கராபரணம் வாசித்து கோயிலில் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2020 03:04
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோய்களை குணமாக்கும் சங்கராபரண ராகத்தை நாதஸ்வரத்தில் வாசித்து கொரோனா கட்டுப்பட கோவிலில் வழிபாடு நடத்தப்பட்டது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மருதூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராம வர தாகினி மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு சம்வத்ஸர அபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து உலக மக்கள் விடுபட்டு நலம் பெற சிறப்பு ஹோமம் நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. கோயில் அர்ச்சகர்கள் தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து பூஜைகளை செய்தனர். இந்த நிகழ்வின்போது நாதஸ்வரத்தில் சங்கராபரணம் ராகம் வாசிக்கப்பட்டது. சங்கராபரண ராகத்தை கேட்பதன் மூலம் மருந்துகளால் குணப்படுத்தமுடியாத நோய்களையும் குணப்படுத்த முடியும் என்கின்றனர். ராகங்களுக்கு மழையை தருவிக்கவும், நோய்களை குணப்படுத்தவும் முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாதஸ்வரத்தில் சங்கராபரணம் ராகம் இசைப் அதை கேட்பதால் இந்த நோய் கட்டுப்படும் என்று தெரிவித்து பிரபல நாதஸ்வர வித்வான் அறிவுச்சுடர் என்பவர் இக்கோயிலில் உள்ள ராமர் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகள் முன்பு சங்கராபரணம் ராகம் வாசித்தார்.