புராணம் என்பதற்கு ‘பழமையான வரலாறு’ என்பது பொருள். சிவனின் வரலாற்றை விளக்குவது சிவ புராணம். ஆனால் தமிழில் ‘சிவ புராணம்’ என்றதும் நினைவுக்கு வருவது ‘நமச்சிவாய வாழ்க’ என்று தொடங்கும் பாடல் தான். இதில் சிவனைப் பற்றிய புராணக்கதை ஏதும் இடம் பெறவில்லை. சிவ தத்துவத்தைப் பிழிந்த சாறாக இது அமைந்துள்ளது. இப்பாடலில் , ‘சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை’ என மாணிக்கவாசகர் குறிப்பிட்டிருப்பதால் ‘சிவ புராணம்’ என பெயர் வந்தது.