Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலுக்கு பேட்டரி பஸ், ... மார்கழி விசாகம்: பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு மார்கழி விசாகம்: பால தண்டாயுதபாணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 3 கொற்றவை சிற்பங்கள் கண்டுபிடிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 3 கொற்றவை சிற்பங்கள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

13 ஜன
2026
05:01

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சிறுவாக்கூர் கிராமத்தில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவைச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து, விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது: விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கல்பட்டு, சிறுவாக்கூர் கிராமத்தில் கள ஆய்வு செய்தபோது வயல்வெளியில் 2 சிற்றாலயங்களில் மூன்று கொற்றவைச் சிற்பங்கள் தனித்தனியே இருப்பதைக் கண்டறிந்தோம். இந்தச் சிற்பங்கள், 5 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. பல்லவர் கலை பாணியில் கொற்றவை அழகாகவும் கம்பீரமாகவும் காட்சித்தருகிறாள். காதணிகள், கழுத்தணி, கை வளையல்கள் அழகு அணிகலன்களாக காணப்படுகின்றன. இடையில் குறுவாள் ஒன்று இருப்பது கூடுதல் சிறப்பாகும்.  இந்த சிற்பங்கள் 1200 ஆண்டுகளைக் கடந்தும் வழிபாட்டில் இருந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் அரசூர், ஏமப்பேரூர், மொளசூர், சிங்கவரம், ஆசூர் உள்ளிட்ட இடங்களில் தலா இரண்டு கொற்றவை சிற்பங்கள் அமைந்துள்ளன. தற்போது ஒரே ஊரில் 3 கொற்றவை சிற்பங்கள் சிறுவாக்கூரில் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வவாறு செங்குட்டுவன் கூறினார். ஆய்வின்போது விழுப்புரம் மணிகண்டன், அண்ணாதுரை, ராகுல்ஆனந்த், தமிழழகன், சித்தார்த்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணி, இரண்டு ஆண்டுக்குப் பின் துவங்கியது.பல்லடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar