பதிவு செய்த நாள்
17
மே
2020
03:05
கேரளாவில், கொரோனா ஊரடங்கால், கோவில்களில் வருமானம் குறைந்ததால், கோவில் நிலங்களை, விவசாயத்திற்காக குத்தகைக்கு கொடுக்க, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
கொரோனா பீதியால் கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், வருமானமின்றி ஊழியர்கள், சம்பளத்துக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுஉள்ளது.இதையடுத்து, கேரளாவில் கோவில் நிலங்களை, விவசாயத்திற்காக குத்தகைக்கு கொடுக்க, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு, தேவஹரிதம் என பெயரிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் முதல் எர்ணாகுளம் வரை, தேவசம் போர்டுக்கு சொந்தமான, 3,000 ஏக்கர் நிலம், விவசாயத்துக்காக குத்தகைக்கு கொடுக்கப்படுகிறது. -கூட்டுறவு சங்கங்கள், கோவில் கமிட்டிகள், ஹரித கேரள மிஷன் போன்ற அமைப்புகளுக்கு, முன்னுரிமை வழங்கப்படுகிறது. நெல், வாழை, கிழங்கு வகைகள், மூலிகைகள், காய்கறிகள் போன்றவை பயிரிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.