Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்தமரால் உயிர் பிழைத்தேன்! மாதவி வனேஸ்வரர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சுவர் சுவாமி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2020
12:05

சுயம்பு மூர்த்தி, பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தி என பல வடிவங்களில் சுவாமியை தரிசித்திருப்பீர்கள். ஆனால் சுவர் வடிவத்தில் சுவாமியை தரிசித்திருக்கிறீர்களா? நாகர்கோவில் அருகிலுள்ள புத்தேரி யோகீஸ்வரர் கோயிலில் மதில் சுவரை சுவாமியாக வழிபடுகின்றனர்.
முற்காலத்தில் இங்கிருந்த பூலாத்தி மரத்தின் அடியில் காவல் தெய்வமான சாஸ்தா, பீட வடிவில் கோயில் கொண்டிருந்தார்.  இப்பகுதி மக்கள் ‘பூலா உடைய கண்டன் சாஸ்தா’ என்று பெயரிட்டு கோயில் எழுப்பி வழிபட்டனர். இத்தலத்திற்கு வந்த யோகி ஒருவர், சாஸ்தாவை வழிபட்டு இங்கேயே சமாதி அடைந்தார். சிலகாலம் கழிந்ததும், சமாதி மீது புற்று வளரத் தொடங்கியது.  புற்றையே பக்தர்கள் வழிபடத் தொடங்கினர். பிற்காலத்தில் புற்று இருந்த இடத்தில், சுவர் எழுப்பி வழிபட்டனர்.  சிவ அம்சமாக கருதி சுவாமிக்கு, ‘யோகீஸ்வரர்’ எனப் பெயர் சூட்டினர்.
திறந்த வெளியில் 22 அடி உயரத்தில் இங்கு சுவர் உள்ளது. அதன் உச்சியில் யோகியின் படுத்திருக்கும் வடிவம் உள்ளது.  பூஜையின்போது சாதம் வைவேத்யமாக படைக்கப்படுகிறது.
மூலவராக வணங்கும் சுவரின் மணலை பிரசாதமாகத் தருகின்றனர். புத்திர தோஷம் தீர இதை நெற்றியில் பக்தர்கள் பூசுகின்றனர். வைகாசி விசாகத்தன்று சாஸ்தா, யோகீஸ்வரருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது மாம்பழம், பலாப்பழம், அரிசிமாவு, சர்க்கரை கலந்த  சாறு தயாரிக்கப்படும். ‘மாம்பால்’ எனப்படும் இக்கலவையை சுவாமிக்கு படைக்கின்றனர்.  
பூலா உடைய கண்டன் சாஸ்தா தனி சன்னதியில் இருக்கிறார். பீட வடிவிலுள்ள சாஸ்தாவின் பின்புறம், அவரது சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத்தன்று சாஸ்தா குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார். யோகி இருந்த இடத்தில் புற்று வளர்ந்ததால் ‘புற்றேரி’ எனப்பட்ட இந்த ஊர் ‘புத்தேரி’ என மருவியது.
செல்வது எப்படி
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து 4 கி.மீ.,
விசேஷ நாட்கள்:
வைகாசி விசாகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம்
நேரம்: காலை 6:30 – 7:30 மணி, மாலை 6:30 – இரவு 8:30 மணி
தொடர்புக்கு: 04652 – 275 230, 94871 01770
அருகிலுள்ள தலம்: நாகர்கோவில் நாகராஜா கோயில்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயிர்களை நேசி செப்டம்பர் 29,2026

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை ... மேலும்
 

வேண்டாமே ஆணவம் செப்டம்பர் 29,2026

பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர்.  ‘நான்’ என்னும் அகந்தை அவரது ... மேலும்
 

பசித்தவருக்கு உணவிடு செப்டம்பர் 29,2026

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் ... மேலும்
 

காத்திருக்கு பதவி செப்டம்பர் 29,2026

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி ... மேலும்
 

நுாறில் ஒரு பங்கு செப்டம்பர் 29,2026

இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar