சென்னை : ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என, தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் புனிதமாக கடைப்பிடிக்கும், ரமலான் நோன்பு காலம், இந்த ஆண்டு முடியும் தருவாயில் உள்ளது.இந்நிலையில், தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாஹுத்தீன் முகமது அயூப் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ரமலான் மாதத்துக்கு அடுத்த, ஷவ்வால் மாத பிறை நேற்று, தமிழகத்தில் காணப்படவில்லை. எனவே, இன்று முஸ்லிம்கள் நோன்பு கடைப்பிடிப்பர். தமிழகம் முழுதும், நாளை ரம்ஜான் பண்டிகையான, பெருநாள் கொண்டாடப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.