பிரபஞ்சம் என்பது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் சேர்ந்த இந்த உலகத்தைக் குறிக்கும். உயிர்கள் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை இப்பிரபஞ்சத்தில் தான் கடவுள் படைத்திருக்கிறார். அதனடிப்படையில் சிவபெருமானுக்குரிய பஞ்சபூத தலங்களாக நிலம் – காஞ்சிபுரம் அல்லது திருவாரூர், நீர் – திருவானைக்கா, தீ – திருவண்ணாமலை, காற்று – காளஹஸ்தி, வானம் – சிதம்பரம் ஆகியவை உள்ளன.