ராமநாதபுரம்:ஆடி முதல்வெள்ளியை முன்னிட்டு, ராமநாதபுரத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. முதல் ஆடி வெள்ளியை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் பல பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களில் பெண்கள் நெய், எலுமிச்சை உள்ளிட்ட தீபங்கள் ஏற்றி அம்மனை வழிபட்டனர். சிலர் கூழ்காய்ச்சியும், வேப்பிலை மஞ்சள் பால் அபிேஷகம் செய்து வழிபட்டனர். சேதுபதிநகர் மல்லம்மாள் காளியம்மன்கோயில், முகவை ஊரணி ராஜகாளியம்மன் கோயில், ஓம்சக்திநகர் ஒத்த பனைமரத்து காளியம்மன்கோயில், அல்லி கண்மாய் ராஜமாரியம்மன் கோயில், வெட்டுடையாள் காளி அம்மன் கோயில், பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை நடந்தது.