பதிவு செய்த நாள்
25
ஜூலை
2020
03:07
திருப்பரங்குன்றம் ; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு உற்ஸவர் சன்னதியில் கோவர்த்தனாம்பிகை எழுந்தருளினார். அரிசி, நெல், வெல்லம், வெற்றிலை, பாக்கு, காதோலை கருகமணி, வேப்பிலை, மஞ்சள் கிழங்கு, வளையல்கள், வாழைப்பழம் வைத்து யாகம் வளர்க்கப்பட்டு அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டது. படிகளில் வைக்கப்பட்டிருந்த நெல், அரிசி அம்பாள் முன்பு மூன்றுமுறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி, அபிஷேகம் முடிந்து ஆஸ்தான மண்டபத்தை வலம் வந்தார்.கிரிவலப்பாதை பத்ரகாளியம்மன் கோயிலில் ஐந்து வகை சாதம் படைக்கப்பட்டது. திருநகர் ஸ்ரீநிவாசா பெருமாள் கோயிலில் ஆண்டாள் தாயார் வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.