பலர் கூடும் இடத்தில் ஆடம்பரமான ஆடை அணிந்தும் இறுமாப்புடன் நடந்தார் ஒருவர். ‘நான்’ என்னும் அகந்தை அவர் கண்ணில் தெரிந்தது. எதிரே வந்தவர்களை அலட்சியமாக பார்த்து ஏளனம் செய்தார். திடீரென அவரை பூமிக்குள் புதையச் செய்து தண்டித்தான் இறைவன். இதற்கு நாயகம், ‘‘மறுமை நாள் வரும் வரை அவ்வாறே பூமிக்குள் அவன் அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான்’’ என்றார். கல்வி, பணம், அழகு என எந்த ஆணவமும் ஒருவரிடம் இருக்கக் கூடாது.