Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆரோக்கியமாதா ஆலயத்தில் திருப்பலி திருப்பரங்குன்றத்தில் சுவாமி வீதி உலா ரத்து திருப்பரங்குன்றத்தில் சுவாமி வீதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1 கோடி வசூல்
எழுத்தின் அளவு:
திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1 கோடி வசூல்

பதிவு செய்த நாள்

08 செப்
2020
09:09

திருப்பதி : திருமலை ஏழுமலையான் உண்டியல் வருவாய் ஒரு கோடி ரூபாய் வசூலானது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிக வருமானம் உண்டியல் மூலம் கிடைத்து வருகிறது. ஒரு ஆண்டிற்கு 1000 கோடி ரூபாய்க்கும் மேல் உண்டியல் மூலம் வருவாய் கிடைக்கிறது. கொரோனா தொற்று காலங்களில் ஊரடங்கு அமலில் இருந்த போதும் இ - -உண்டியல் மூலம் பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தினர். தற்போது ஏழுமலையானை தரிசித்து செல்லும் பக்தர்கள் குறைவாக இருந்தாலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 15 ஆயிரத்து 349 பேர் ஏழுமலையானை தரிசித்தனர். அவர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ஒரு கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஊரடங்கிற்கு பின் துவங்கிய தரிசனத்தில் ஏழுமலையானுக்கு கிடைத்த முதல் பெரிய வருமானம் இது என அதிகாரிகள் தெரிவித்தனர். திருமலையில் இம்மாதம் 19 முதல் 27ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்ஸவம் நடக்க உள்ளது. அதற்காக செப். 15ம் தேதி ஏழுமலையான் கோவிலை சுத்தப்படுத்தும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கவுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வருடாந்திர பிரம்மோற்ஸவத்தை தேவஸ்தானம் தனிமையில் நடத்த முடிவு செய்துள்ளது. எனவே செப். 15 மற்றும் செப். 19 முதல் செப். 27ம் தேதி வரையிலான விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar