திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகைதோறும் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நடக்கும்.கொரோனா தொற்றால் இன்று (செப். 8) வீதி உலா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு கோயிலுக்குள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் முடிந்து உள்பிரகாரத்திற்குள் உலா நிகழ்ச்சி நடக்கும் என துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.