கண்டாச்சிபுரம்; ஒதியத்துார் கெங்கையம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நடைபெற்றது. கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்துார் கெங்கையம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நடைபெற்றது.முன்னதாக நேற்று காலை கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, குளக்கரையில் இருந்து பூங்கரக ஊர்வலம் நடைபெற்றது.மாலை ஏரிக்கரை மாரியம்மன் கோவிலில் ஊரணிப்பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சமூக இடைவெளியுடன் பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டனர்.அதனைத்தொடர்ந்து இரவு சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் செய்தனர்.