Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தும்பைப்பட்டி சங்கரலிங்கம் சுவாமி ... சிவன்மலை உத்தரவு பெட்டியில் நிறைநாழி படி அரிசி வைத்து பூஜை சிவன்மலை உத்தரவு பெட்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர், லட்சுமணர், சீதை சிலைகள் லண்டனில் இருப்பது கண்டுபிடிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமர், லட்சுமணர், சீதை சிலைகள் லண்டனில் இருப்பது கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

16 செப்
2020
09:09

 சென்னை;தமிழக கோயிலில் இருந்து 42 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி வெண்கல சிலைகள் லண்டனில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் விஜயகுமார். சிங்கப்பூரில்வசித்து வரும் இவர் சிலைகள் மீட்பு பணிக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் வாயிலாக தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க போலீசாருக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள டீலர் ஒருவர் விற்பனைக்கு இருப்பதாக இணையதளத்தில் சிலைகளின் படங்களை வெளியிட்டார்.அவற்றில் தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் இருப்பதை விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர் கண்டறிந்தனர். இதுகுறித்த படங்களை ஆய்வு செய்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பினர்.

அந்த படங்களில் இருப்பது மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம் என்ற ஊரில் உள்ள கோயிலில் இருந்து 1978ல் திருடப்பட்ட ராமர், லட்சுமணர் மற்றும்சீதா பிராட்டி வெண்கலசிலைகள் என்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உறுதி செய்தனர். மேலும் அதற்கான ஆதாரங்களை பிரிட்டன் அரசுக்கு அனுப்பினர். தகவல் அறிந்து அந்த டீலர் ராமர் உள்ளிட்ட மூன்று சிலைகளையும் லண்டன்அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். சிலைகளை தமிழகத்திற்கு எடுத்து வர இந்தியதொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar