பதிவு செய்த நாள்
03
அக்
2020
10:10
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்துகொண்டு வரப்பட்ட பட்டு சாற்றப்பட்டது.
திருப்பதி புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளன்று ஏழுமலையான் சாற்றி கொள்ள ஸ்ரீவி., ஆண்டாள் சூடி களைந்த மாலை, கிளி, வஸ்திரம் அனுப்பப்பட்டது. எதிர் சீராக திருப்பதி ஏழுமலையான் சாற்றி கொடுத்த பட்டு, மங்கள பொருட்கள், இரண்டு குடைகள் ஆண்டாளுக்கு கொண்டு வரப்பட்டது.இதனை ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சாற்றும் வைபவம் நேற்றிரவு 7:10 மணிக்கு ஆண்டாள் கோயிலில் நடந்தது. ஸ்தானிகம் ரமேஷ் வீட்டிலிருந்து யானை முன்செல்ல பட்டு, மங்களபொருட்கள், குடைகள் எடுத்து வரப்பட்டது. வெள்ளிக் கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு பட்டு சாற்றி, சிறப்பு பூஜைகளை சுரேஷ் பட்டர் செய்தார்.தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் இளங்கோவன், வேதபிரான் சுதர்சன், மணியம் கோபி, ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ் பட்டர் பங்கேற்றனர்.